மாப்பிள்ளை சம்பா சிகப்பு அவல் உப்புமா
மாப்பிள்ளை சம்பா அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்
அவல் – 1/2kg
கடுகு – 1 tablespoon
கடலைப்பருப்பு – 1 tablespoon
உளுத்தம்பருப்பு – 1 tablespoon
கட்டிபெருங்காயம் அரைத்தது – சிறிதளவு
மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
கறிவேப்பில்லை – தேவையான அளவு
கடலை எண்ணை – 5 tablespoon
செய்முறை
sigappu aval uppuma
அவலை நல்ல தண்ணீரில் அலசி கொள்ளவும், கடாயில் 5 tablespoon கடலை எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். பிறகு மிளகாய், கறிவேப்பில்லை சேர்த்து வருத்தவுடன் அவல் சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும். பிறகு அவல் முழுகும் அளவு தண்ணீர் (அ) 1 டம்ளர் கொதிக்க வைத்த நீரை விடவும். பிறகு தேவையான உப்பு சேர்த்து குறைவான தீயில் நன்கு வேகவிடவும், வெந்தவுடன் கீழே இறக்கும் தருவாயில் தேங்காய் துருவலை தூவவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான மாப்பிள்ளை சம்பா அவல் உப்புமா தயார்
மருத்துவ குணம் மிகுந்த சிவப்பு அவல் உப்புமாவை காலை,இரவு உணவாகவும் உண்ணலாம்.